பேஸ்புக் ஊடாக கொரோனா வதந்தி: பல்கலை உத்தியோகத்தர் சிக்கினார்

42 XL
42 XL

கொரோனா வைரஸ் தொடர்பில் பேஸ்புக் ஊடாக வதந்திகளைப் பரப்பியமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கொழும்பு பிரதான நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மஹரகம பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒருவரே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.