தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் பணி நிறைவு!

postal votes 2
postal votes 2

எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை பொறுப்பேர்க்கும் பணி இன்றுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் மாதம் 30 ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் தபால் மூலமான வாக்களிப்பு இடம்பெறவிருப்பதாக தேர்தல் அணைக்குழுவினால் அறிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் திணைக்கள மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகளுக்கு நவம்பர் மாதம் முலாம் திகதி தபால் மூலம் வாக்களிப்பதற்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது.

தபால் மூலம் வாக்களிப்பதற்கான தகுதிகளை பூர்த்தி செய்த அனைவரும் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் தினம் இன்று ஆகும்.

இன்றை தினம் விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் தமது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை கண்டறியுமாறும் தேர்தல் ஆணைக்குழு பொது மக்களிடம் கோட்டுக்கொண்டுள்ளது.

www.elections.gov.lk என்ற இணையத்தளத்தில் அல்லது 1919 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்பு கொண்டு அல்லது தமது கிராம உத்தியோகத்தரிடம் தொடர்பு கொண்டு வாக்காளர் இடாப்பு தொடர்பான விடயங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு பொறுப்பேற்க்கப்படவுள்ளது.