பல்கலைக்கழக கல்வி சார் ஊழியர்களின் சம்பள பிரச்சினை தீர்விற்கு அமைச்சரவை அங்கீகாரம்

uni
uni

பல்கலைக்கழக கல்விசார் ஊழியரக்ளின் சம்பள பிரச்சினைக்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக நகர திட்டமிடல் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட சம்பளத்தை மதிப்பீடு செய்வதற்கு அமைச்சரவை துணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது தொடர்பில் பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களின் சங்கத்துடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று செயலாளர் பியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.