டெங்கு காய்ச்சலால் 77 பேர் பலி!

dengue
dengue

நடப்பு ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் இலங்கை முழுமையிலும் டெங்குக் காய்ச்சலால் 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த காலப்பகுதிக்குள் 50, 607 பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தின் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ் வருடத்தின் செப்டம்பர் மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 10 வீதத்தால் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக இன்று (03) முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ​டொக்டர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

மழையுடனான வானிலையால் மீண்டும் டெங்குக் காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் 3 நாட்களுக்கு டெங்கு நோயாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.