கிழக்கு மாகாண அரச ஊழியர்களின் 2020ஆம் ஆண்டிற்கான இடமாற்றம்

transfer
transfer

கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் ஊழியர்களின் 2020ஆம் ஆண்டிற்கான இடமாற்ற விபரங்களை மாகாண உத்தியோகபூர்வ இணையத்தளமான www.ep.gov.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியுமெனவும், 2020ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் வழங்குவது தொடர்பாக கூறப்பட்ட விண்ணப்பங்களுக்கு இடமாற்ற சபையினால் சிபார்சு செய்யப்பட்ட பட்டியல்கள் தற்பொழுது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் மாகாண பிரதிப் பிரதம செயலாளர் எச். ஈ. எம். டபிள்யூ. ஜீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்விடமாற்றம் 2020 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்பதனையும், இடமாற்றம் தொடர்பில் மேன்முறையீடுகளை எதிர்வரும் 16ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறும் சகல செயலாளர்களுக்கும், திணைக்கள உத்தியோகஸ்தர்களுக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது.