கட்சியின் செயற்குழுக் கூட்டத்திற்கு மைத்திரி அழைப்பு!

Maithiri Bala CI
Maithiri Bala CI

சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த சந்திப்பு நாளை ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான நடவடிக்கைகள் நாளை 2 மணிக்கு இடம்பெறும் கூட்டத்தின்போது இறுதி செய்யப்படும் என கட்சியின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் சுதந்திர கட்சியின் அனைத்து தேர்தல் மற்றும் மாவட்ட அமைப்பாளர்களும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

சுதந்திர கட்சியின் செயற்குழு இறுதியாக செப்டம்பர் 3 ஆம் திகதி அன்று கட்சியின் ஆண்டு மாநாட்டிற்கு முன்பு கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.