ஜனாதிபதி தேர்தல் வர்த்தமானி அறிவிப்பு சட்டவிரோதமானது- உயர் நீதிமன்றில் மனு தாக்கல்

Court
Court

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றில் முன்னாள் காலி மேயர் மெத்சிறி டி சில்வாவினால்
இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த மனுவினை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணையாளர் உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

மேலும் இந்த மனு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 6 ஆண்டுகள் பதவியில் இருப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தலுக்காக 7 ஆம் திகதி நடைபெறவுள்ள வேட்புமனுத் தாக்கலை இடை நிறுத்துவதற்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.