மைத்திரி தரப்பு – கோத்தா சந்திப்பு

gota 1
gota 1

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெர முனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜ பக்சவுடன் நீண்ட சந்திப் பொன்றை நடத்தினர்.

சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலர் மஹிந்த அமரவீர,நாடாளு மன்ற உறுப்பினர் லசந்த அழ கியவண்ண ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி மைத்திரியின் விசேட தகவல் ஒன்றை அவர்கள் கோட்டாபயவிடம் முன்வைத்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கூட்டணி ஒப்பந்தத்துக்கான நகல் ஒன்றும் இதன்போது கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பையடுத்து கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் ஒருவர் ,இன்னும் சில தினங்களில் இருதரப்பு கூட்டணி ஒப்பந்தத்திற்கான இறுதிவரைவுபூர்த்தி செய்யப்படுமென்று குறிப்பிட்டார்.