ஜனாதிபதித் தேர்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு!

court
court

ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்கும் அதிசிறப்பு வர்த்தமானி வெளியீடு சட்டரீதியற்றது எனக் கட்டளையிடக் கோரி உயர் நீதிமன்றில் உறுதிகேள் நீதிப்பேராணை மனு ஒன்று நேற்றுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எதிர் வரும் நவம்பர் 16ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பைத் தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 18ஆம் திகதி வெளியிட்டது.

அரசமைப்பின் 104ஆவது, உறுப்புரையோடு சேர்த்து வாசிக் கப்படும், 1981 ஆம் ஆண்டின் 15 ஆம், இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் 2 ஆம் பிரிவு என்பவற்றால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உரித்தாக்கப் பட்டுள்ள தத்துவங்களின் பயனைக் கொண்டு, 1. 2019, ஒக்ரோபர் மாதம் 07 ஆம் திகதி, ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களைப் பெயர் குறித்து நியமிப்பதற்கான நாளாக வும், 2. தேர்தல்கள் செயலகம் , சரண மாவத்தை, இராஜகிரிய – இதனை தேர்தலுக்கான வேட் பாளர்களைப் பெயர் குறித்து நியமிப்பதற்கான இடமாகவும், 3. 2019, நவம்பர் மாதம் 16 ஆம் திகதியை அத்தகைய தேர் தலுக்கான வாக்கெடுப்பு நடத்தப் பட வேண்டிய நாளாகவும், இக் கட்டளை மூலம் நிர்ணயிக்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது.

இதில், தேர்தல் ஆணைக்குழு வின் மூன்று உறுப்பினர்களும் ஒப்பமிட்டனர். இந்த நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிடப் பட்ட இந்த வர்த்தமானி அறிவிப்பை வெற்றும் வெறிதானதுமாக கட்டளையிடுமாறு கோரி நேற்று உயர் நீதிமன்றில் நீதிப்பேராணை மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட் டமைப்பின் காலி மாநகரின் முன்னாள் முதல்வர் என்.ஜி. மீத் சிறி டி சில்வா மனுதாரராகக் குறிப் பிடப்பட்டுள்ளமையுடன், எதிர்மனு தார ராகத் தேர்தல்கள் ஆணைக் குழு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்ட போது, அவருக்கு 6 ஆண்டுகள் பதவிகாலம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 4 ஆண்டுகள் நிறைவில் தேர்தலை நடத்த முடியாது என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நிர்ணயிக்கப்பட்ட நவம்பர் 16ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலைந டத்துவதற்குஇ டைக்காலத் தடை உத்தரவு வழங்குமாறும் மனுதாரர் மனுவில் கோரியுள்ளார். இந்த மனுவை இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.