7 வைத்தியசாலைகளில் 478 பேருக்குச் சிகிச்சை!

6 P 1
6 P 1

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 622 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் மேலும் 134 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும், 481 பேர் 7 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நோயாளிகளில் 140 பேர் கொழும்பு தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலும், 63 பேர் வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையிலும், 69 பேர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையிலும், 22 பேர் இரணவில வைத்தியசாலையிலும், 55 பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலும், 03 பேர் மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையிலும், 129 பேர் வெலிசறையிலுள்ள கடற்படை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, மேலும் 250 பேர் 33 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.