கட்டுப்பணம் செலுத்திய பின்னர் சின்னத்தை மாற்றமுடியுமா? – தேசப்பிரிய மௌனம்!

mahinda desapriya
mahinda desapriya

ஒரு வேட்பாளர் சார்பாக ஒரு சின்னத்தில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்ட பின்னர், அவர் சின்னத்தை மாற்ற முடியுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மெளனம் சாதித்தார்.

நாளை சனிக்கிழமை பொதுவிடுமுறை என்பதால், ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எனினும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிவரை வேட்பாளர்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

ஒரு வேட்பாளர் சார்பாக ஒரு சின்னத்தில் போட்டி யிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்ட பின்னர், அவர் சின்னத்தை மாற்ற முடியுமா என்றும், இரண்டாவது முறையாக இன்னொரு சின்னத்தில் போட்டியிடக் கட்டுப்பணம் செலுத்த முடியுமா என்றும் தேர்தல்கள் ஆணையாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்கு கருத்து எதையும் வெளியிட அவர் மறுத்துள்ளார்.

அந்த விவகாரம் பற்றி தேர்தல் ஆணைக்குழு கரிசனை கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.