கம்பளையில் பாடசாலை முடிந்து வீடு திரும்பிய ஆசிரியை காணாமல் போனார்!

teach
teach

பாடசாலை கடமை முடிந்து வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்த ஆசிரியை ஒருவர் முதலாம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

கம்­பளை கீரப்­பனை பிர­தே­சத்தைச் சேர்ந்த சந்­திமா நிஸன்­சலா என்ற 27 வய­து­டைய ஆசி­ரியையே இவ்­வாறு காணாமல் போயுள்­ள­தாக பொலிஸ் முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அட்டன் ஸ்ரீபாத வித்­தி­யா­ல­யத்தில் ஆங்­கிலம் கற்­பிக்கும் ஆசி­ரி­யை­யாகக் கட­மை­யாற்றி வந்த குறித்த ஆசி­ரியை சம்­ப­வ ­தி­ன­மான செவ்வாய்­க்கி­ழமை இர­வா­கியும் வீட்­டுக்கு வரா­த­தை­ய­டுத்து ஆசிரியையின் தாய் மகள் கட­மை­யாற்றும் பாட­சாலை அதிபரை தொலை­பேசியூடாக தொடர்பு கொண்­டு விசாரித்துள்ளார்.

குறித்த ஆசி­ரியை வழ­மைபோல் அங்­கி­ருந்து புறப்­பட்டு விட்­ட­தாக அதிபர் கூறி­ய­தை­ய­டுத்து, பதற்­ற­ம­டைந்த தாய் இது குறித்து கம்­பளை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

கிடைக்­கப்­பெற்ற முறைப்­பாட்­டுக்­க­மைய விசா­ர­ணை­களை மேற்கொண்டு வந்த பொலிஸார் மறுநாள் புதன்­கி­ழமை குறித்த ஆசி­ரி­யையின் வீட்­ட­ருகே நிதாஸ் மாவத்­தையில் அமைந்­துள்ள தனியார் கல்­வி­ய­கத்தில் பொருத்­தப்­பட்­டி­ருந்த கண்­கா­ணிப்பு கெம­ரா­வினை பரீட்­சித்து பார்த்த பொழுது மாலை 4 மணி ஆறு நிமி­ட­ம­ளவில் ஆசிரியை வீடு நோக்கி செல்­வது பதி­வா­கி­யி­ருந்­துள்­ளது.

இதி­லி­ருந்து குறித்த ஆசி­ரியை தனது வீட்­டுக்கு 100 மீற்றர் இடைவெளிக்­குள்­ளேயே காணாமல் போயுள்­ளமை தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.