ஜனாதிபதி தேர்தல் வர்த்தமானி அறிவிப்பு சட்டவிரோதமானது- உயர் நீதிமன்றில் மனு நிராகரிப்பு

Court
Court

ஜனாதிபதி தேர்தலுக்காக அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வேட்பு மனுவை கோருவதற்கான வர்த்தமானி அறிவிப்பை இடை நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதி மன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பை
இடைநிறுத்துவதற்கு ரிட் உத்தரவை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைகள் இன்றி இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

காலி, முன்னாள் நகர சபை முதல்வர் மெத்சிறி டி சில்வா நேற்று இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். விஜித் மலல்கொட, ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் காமினி அமரசேகர ஆகிய நீதியரசர்களைக் கொண்ட குழு முன்னிலையில் இந்த மனு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.