இரண்டு மாதங்களின் பின்னர் யாழ்.குடாநாடு மீண்டும் வழைமைக்கு!

6 oad
6 oad

இரண்டு மாதங்களின் பின்னர் யாழ்.குடாநாடு மீண்டும் வழைமை நிலைக்கு திரும்பவுள்ள நிலையில் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் விழிப்பாக செயற்படவேண்டும் என யாழ்.வணிகர் கழகத்தின் உபதலைவர் இ.ஜெயசேகரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இ.ஜெயசேகரம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

நாளைய தினம் யாழ்குடா நாடானது மீண்டும் வழமை நிலைக்கு திரும்ப உள்ளது எனினும் கொரோனாநோய் தாக்கமானது முற்றாக நீங்கி விடவில்லை என்ற விடயத்தினை கருத்திற்கொண்டு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என இ.ஜெயசேகரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். நகர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் அளவுக்கு அதிகமான ஊழியர்களை கடமையில் ஈடுபடுத்தாது தங்களுடைய வர்த்தக நிலையத்தில் அதிக அளவிலான மக்களை உள்ளே அழைத்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளாது சமூக இடைவெளியினை அவசியம் பின்பற்றவேண்டும் எனவும் இ.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கொரோனா தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றி அனைவரும் செயற்படுவதன் மூலமே நாம் எம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் இ.ஜெயசேகம் மேலும் தெரிவித்துள்ளார்.