செப்டெம்பர் வரையில் தள்ளிப்போகுமா தேர்தல்?

7 d 1 2
7 d 1 2

ஜூன் மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாமல் போனால் செப்டெம்பர் மாதம் வரையில் ஒத்திவைக்கப்படலாம் என்று நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

தற்போதைய நெருக்கடி சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு குறைந்தபட்சம் செப்டெம்பர் மாதம் வரையாவது தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

“தேர்தல் பரப்புரையை முன்னெடுப்பதற்கு ஐந்து வாரங்களாவது அவசியம். நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. 21 நாட்கள் கால எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது நிறைவடைவதற்கு மே நடுப்பகுதி தாண்டும். அத்துடன், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் நாட்டில் இயல்பு நிலை திரும்புவதற்கு சிறிது காலம் எடுக்கும்” எனவும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இவை உட்பட மேலும் சில காரணிகளைக் கருத்தில்கொண்டே தேர்தலை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடலொன்று இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இதன்போது இது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்றும், சுகாதார தரப்பு உத்தரவாதம் வழங்கும் பட்சத்தில் திட்டமிட்ட அடிப்படையில் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் அறியமுடிகின்றது.