கோத்தபாய போட்டியிட்டு தோற்கவேண்டும் – சஜித்!

sajith gota
sajith gota

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தன்னுடன் தேர்தலில் போட்டியிட்டே தோற்க வேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய இலங்கைப் பிரஜாவுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதியரசர்கள் குழாமால் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் சர்வதேச செய்திச் சேவையொன்றின் கொழும்புச் செய்தியாளர் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கோத்தபாய எனக்குச் சவால் அல்ல. இதனை நான் பல தடவைகள் கூறியுள்ளேன். அதேவேளை, நானும் தனக்குச் சவால் அல்ல என்று கோத்தபாயவும் பல தடவைகள் தெரிவித்துள்ளார்.

ஆனால், மக்களின் வாக்குகள்தான் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கப் போகின்றன. பெரும்பாலான மக்கள் கோத்தபாயவைத் தோற்கடிக்கத் தயாராகவுள்ளனர். எனவே, அவரின் தோல்வி உறுதி என்றே நான் நம்புகின்றேன்” என மேலும் தெரிவித்தார்.