வரிசையில் நின்று மதுபானத்தை கொள்வனவு செய்ய முண்டியடிக்கும் மது பிரியர்கள்

8 5
8 5

மழையினையும் பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் நின்று மதுபானத்தை கொள்வனவு செய்ய முண்டியடிக்கும் மது பிரியர்கள்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அரசாங்கத்தினால் மதுபானசாலைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர் யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள மதுபான நிலையங்களில் மது பிரியர்கள் மதுபானத்தை கொள்வனவு செய்வதற்காக முண்டியடிக்கின்றதை அவதானிக்க முடிந்தது.

சமூக இடைவெளியினை பின்பற்றி மதுபானத்தை கொள்வனவு செய்வதற்காக மது பிரியர்கள் நீண்ட வரிசையில் வீதிகளில் நின்று மழையின் மத்தியிலும் தமக்கு தேவையான மதுபானத்தினை கொள்வனவு செய்வதற்காக காத்து நின்ற காட்சிகளையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

மதுபான உரிமையாளர்களினால் மதுபான நிலையங்களுக்குள் ஒவ்வொருத்தர் மட்டுமே தனியாக சென்று மதுபானத்தை கொள்வனவு செய்ய அனுமதிக்கப் படுகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.