ராஜபக்சக்களின் விஷமத்தனமான ஆயுதமே இனவாதம் – அநுரகுமார

1 qa
1 qa

நாட்டு மக்களுக்கு நல்லவர்கள் போல் பாசாங்கு காட்டிக்கொண்டு மறுபுறத்தில் ஆட்சியைத் தக்கவைப்பதற்காக தமிழ் – முஸ்லிம் – சிங்கள விரோத இனவாதத்தைக் கிளறிவிடுவது ராஜபக்ச கூட்டணியின் விஷமத்தனமான ஆயுதமாக உள்ளது என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றிவாகை சூடி – மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியில் மீண்டும் அமர்ந்துகொள்வதே ராஜபக்ச கூட்டணியினரின் இலக்காகும்.

இதற்காகவே அவர்கள் நாடெங்கிலும் இனவாதச் செயற்பாடுகளை மறைமுகமாக அரங்கேற்றி வருகின்றனர்.

அதில் முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிரான இனவாதச் செயற்பாடுகள் முதலிடத்தில் இருக்கின்றன.

கொரோனா வைரஸ் பேரிடரையும் தமது இனவாதச் செயற்பாடுகளுக்கு ராஜபக்ச அரசு பயன்படுத்திக்கொள்கின்றது. மனிதாபிமானமற்ற முறையில் எதேச்சதிகாரத்துடன் இந்த அரசு செயற்படுகின்றது.

ராஜபக்சக்களின் இந்த இனவாதச் செயற்பாடுகளுக்கும், எதேச்சதிகார ஆட்சிக்கும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் பதிலளிக்க வேண்டும்” – என குறிப்பிட்டுள்ளார் .