இனவாதத்தைத் தூண்டாதீர்கள்; இன ஒற்றுமையுடன் வாழ்வோம் – பிரதமர்

er
er

இனவாதங்களைத் தூண்டும் வகையில் எவரும் செயற்படக்கூடாது இன ஒற்றுமையுடன் அனைவரும் வாழ ஓரணியில் திகழ வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இனவாதத்தை வளர்த்து விட்டு, அதில் குளிர்காய எவரும் முற்படக்கூடாது எனவும்,நாட்டில் அரங்கேற்றப்பட்டுவரும் இனவாதச் செயற்பாடுகளுக்கும் அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மூவின மக்களும் இன, மத, மொழி வேறுபாடின்றி ஒற்றுமையுடன் வாழ்வதே அரசின் விருப்பம் எனவும், இனவாதத்தைத் தூண்டி அதிகாரத்தைத் தக்க வைப்பது அரசின் நோக்கமல்ல எனவும்
உண்மையான இனவாதிகளை மக்கள் முன்னிலையில் நிறுத்தி அவர்களுக்குத் தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதே அரசின் குறிக்கோள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.