கல்வி நிலையை தோற்கடிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது!

6ad
6ad

நாட்டில் ஏற்பட்ட இரண்டு கலவரங்களுக்கும் முப்பது வருட யுத்தத்திற்கும் முகம் கொடுத்து முன்னேறிய இலங்கையின் கல்வி நிலையை கொரோனா தோற்கடிக்க இடமளிக்ககூடாது என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

1971ஆம் ஆண்டு மற்றும் 1988, 1989ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கலவரங்களையும், முப்பது வருட யுத்தத்தையும் எதிர்கொண்டு வெற்றி கண்ட இலங்கையின் கல்வி நிலையை கொரோனா தொற்று தோற்கடிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

இந்த நிலையில் போசனை குறைந்த மாணவர்களுக்கும் மற்றும் நூற்றுக்கு குறைந்த மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளை தெரிவு செய்து 1000 ரூபா பெறுமதியான போசனை பொருட்கள் இம்மாதம் முதல் பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கல்வி பொது தர உயர்தர வகுப்புகள் முதலில் ஆரம்பிக்கப்பட்டு ஏனைய வகுப்புகளை படிப்படியாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கரி கொப்பேகடுவ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.