கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த காற்றினால் மின்கம்பங்கள் முறிந்தன !!

Weather 5
Weather 5

கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த காற்றினால் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தமையல் பல கிராமங்களுக்கு மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளது .
கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று காலை முதல் வீசி வரும் பலத்த காற்று காரணமாக பூநகரி குடமுருட்டி பகுதியில் உள்ள மின் கம்பங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக பூநகரிப் பிரதேசத்தில் உள்ள பல கிராமங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. ஆறு மின்கம்பங்கள் முற்றாக சேதமடைந்துள்ளன .

இதே வேளை கிளிநொச்சி இரத்தினபுரம் சித்தி விநாயகர் ஆலயத்திற்கு முன்பாக காணப்பட்ட பாரிய பாலை மரம் வீழ்ந்தன் காரணமான இரண்டு மின் கம்பங்கள் சேதமடைந்தமையால் வட்டக்கச்சி, இராமநாதபுரம் பகுதிகளுக்கான மின்சாரம் முற்றாக தடைப்பட்டுள்ளது.

இதே வேளை போக்கு வரத்தும் தடைப்பட்டமையால் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து வீழ்ந்த மரத்தை அகற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.