முல்லையடி பகுதியில் விபத்தில் இருவர் காயம்!

Palai Accident 10
Palai Accident 10

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சிக்கிய இருவரையும் பளை வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளிற்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரே இவ்வாறு காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முச்சக்கரவண்டியை செலுத்திய சாரதியான 53 வயதுடை வைரவநாதன் சிவராசா மற்றும் 71 வயதுடைய சுப்ரமணியம் துரைவீரசிங்கம் ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

குறித்த இருவரும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து இடம்பெற்றமை தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.