வெட்டுக்கிளிகள் படையெடுப்பு -உடன் அறிவிக்க வேண்டுகோள்!

41
41

நாட்டிற்குள் வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களை நாசமாக்கி வருக்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக வெட்டுக்கிளிகளின் உடலில் மஞ்சள் மற்றும் கறுப்பு புள்ளிகள் உள்ள வெட்டுக்கிளிகளின் பரவல் எதிர்பாராத விதமாக அதிகரித்து வருவதை அவதானித்தால் உடனடியாக விவசாய திணைக்களத்திடம் அறிவிக்குமாறு விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குருணாகல் மாவத்தகம பகுதியில் புதிதாக பரவிய வெட்டுகிளிகளின் தாக்கம் ஊவா தென் மாகாணங்களுக்கு பரவியுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதைத் தவிர மாவனெல்லை வறக்காப்பொல ஆகிய பகுதிகளில் இந்த வெட்டுக்கிளிகள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

வெட்டுக்கிளிகளின் தாக்கத்தினால், வாழை , தென்னை , மா, கோப்பி , மரவள்ளி ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கான கிருமிநாசினியை உடன் கண்டுப்பிடிக்குமாறு விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி எம்.டபிள்யூ. வீரகோன் பேராதெனிய விவசாய ஆராய்ச்சி நிலையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.