கோட்டா அரசு முடியுமானால் ஆட்சியைப் பாதுகாக்கட்டும்! – முன்னாள் நீதி அமைச்சர்

Thalatha
Thalatha

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஏகாதிபத்திய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நாட்டில் தற்போது தேர்தல் அத்தியாவசியமானதாகும். ஆகஸ்ட் 5ஆம் திகதி மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதல்ல; முடியுமானால் ஆட்சி அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று அரசுக்குச் சவால் விடுகின்றேன்.” என முன்னாள் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

“அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிகளில் ஏன் இராணுவத்தினர் மாத்திரம் உள்ளடக்கப்பட்டுள்ளனர்? இராணுவமயமாக்கலுடனான ஏகாத்தியத்தியத்தை நோக்கி நாடு செல்கின்றதா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறிய அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மக்களைப் பற்றி சிறிதும் சிந்திக்காது தேர்தலுக்கான திகதி முதல் அறிவிக்கப்பட்டது. ஜூன் 2ஆம் திகதி புதிய நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது என்று தெரிந்திருந்தும் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த அரசின் இவ்வாறான நடவடிக்கைகளின் காரணமாகவே இன்று கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதற்கு ஜனாதிபதியும் இந்த அரசுமே பொறுப்புக்கூற வேண்டும். ஏகாதியத்திய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நாட்டில் தற்போது தேர்தல் அத்தியாவசியமானதாகும். ஆகஸ்ட் 5 ஆம் திகதி மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதல்ல; முடியுமானால் தற்போதைய அரசைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று சவால் விடுகின்றேன்” – என்றார்.