சுமந்திரன் பாலா அண்ணா போன்றவர் என்று பேசி, சமூக வலைத்தளங்களில் பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன்.
அண்மையில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் சுமந்திரனுக்கு ஆதரவு வேண்டிப் பேசிய சிறீதரன் சர்ச்சையான பல விடயங்களையும் அதில் பேசியுள்ளார்.
இதில் ‘தலைவர் பிரபாகரன் அவ்வளவுதூரம் பிழையானவர் இல்லை’ என்றும் இலங்கை அரசு கிண்ணம் வென்றதை கொண்டாடியவர் என்றும் ஒரு கதையை அவிழ்த்துவிட்டுள்ளார்.
‘தலைவர் பிரபாகரன் அவ்வளவு தூரம் பிழையானவர் இல்லை’ என்று சிறீதரன் கூறியிருப்பதன் அர்த்தம் என்ன? என்று அவர்மீது கடும் விமர்சனங்களும் எதிர்ப்புக்களும் முன்வைக்கப்படுகின்றன.