சுமந்திரன் பாலா அண்ணாவைப் போன்றவர் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் கூறிய கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளதுடன் சிறீதரனின் நகைச்சுவைததனமான வேலையை பற்றி பலரும் சுவாரசியப் பதிவுகளை எழுதி வருகின்றனர்.
ஈழப் போராட்டத்துடன் தொடர்புடைய தோழர் பாலன், இந்த விடயம் குறித்து முகநூலில் இட்ட பதிவு இதோ!
என்னது சுமந்திரன் அன்டன் பாலசிங்கமா?
தன்னை பிரபாகரன் என்று நினைத்து கனவு காண சிறீதரனுக்கு உரிமை உண்டு.
ஆனால் அதற்காக சுமந்திரனை அன்டன் பாலசிங்கமாக தமிழ் மக்கள் கருத வேண்டும் என்று கேட்பது ரொம்பவும் ஓவர்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வேட்பாளர்கள் பொய் சொல்வது வழமைதான்.
ஆனால் அதற்காக கொஞ்சம்கூட கூச்சமின்றி இப்படி ஒரு பொய்யை சிறீதரன் கூறியிருக்கக்கூடாது.
அன்டன் பாலசிங்கம் கொழும்பில் வாழ்ந்திருக்கிறார். அவர் எப்போதாவது கொழும்பில் வாழ்ந்தது தனது பாக்கியம் எனக் கூறியிருக்கிறாரா?
அன்டன் பாலசிங்கம் ஆயுதப் போராட்டத்தை வன்முறை என்றும் அதனை தன்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறாரா?
தனது தேர்தல் செலவுக்கு சுமந்திரன் பணம் தருவதற்கு இணங்கிய காரணத்திற்காக சிறீதரன் அன்டன் பாலசிங்கத்தை இந்தளவுக்கு அசிங்கப்படுத்த வேண்டுமா?
தேர்தல் முடிவதற்குள் சுமந்திரன் பற்றி இன்னும் என்னென்னமெல்லாம் கேட்டு தொலைக்க வேண்டி வருமோ?
ஆண்டவா, தமிழ் மக்களை காப்பாத்து!