யாழ் சர்வதேச விமான நிலையத்தில் அரசியல் இல்லை – ஆணைக்குழு எச்சரிக்கை

ELection Dep 1
ELection Dep 1

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ள பலாலி விமான நிலையத்தின்திறப்பு விழாவை அரசியல்வாதிகள் தமது அரசியல் நலன்களை அடைவதற்காகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

எதிர்வரும் 17ம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், பிராந்திய விமான சேவைகளை நடத்துவதற்காக திறந்து வைக்கப்படவுள்ளது.

இதுகுறித்து யாழ்ப்பாணம் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.சி.அமல்ராஜ் கருத்து வெளியிடுகையில்,

“தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இடத்தை அரசியல்வாதிகள் எவரும் தமது அரசியல் நலனுக்காக பயன்படுத்திக்கொண்டால், அது தேர்தல் சட்ட மீறலாக கருதப்படும். எனவே, அவ்வாறு அரசியல் நலனைப் பெறுவதற்காக விமான நிலைய திறப்பு விழாவைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் என அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்”
என கூறியுள்ளார்.