பாதிக்கப்பட்டோருக்கம் ஊடகவியலாளருக்குமிடையில் சந்திப்பு

IMG 20191013 WA0002
IMG 20191013 WA0002

பாதிக்கப்பட்டோருக்கும் ஊடகவியலாளருக்கும் இடையில் ஒரு புரிதல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டோர் அடிப்படையில் எதை வேண்டி நிற்கிறார்கள் என்ற விடயத்தை ஆராயும் பொருட்டு DATA அமைப்பினால் ஓழுங்குபடுத்தப்பட்ட ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் யாழ் நகர் Green Grass Hotel Tulip Hall இல் சனிக்கிழமை நடைபெற்றது.

போர் முடிந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையில் சுயமதிப்பீட்டு மாநாடு பாதிக்கப்பட்டோர் பதின்மம் கழிந்தும் என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது. மாநாடும் அதன் பின்னரான செயற்பாடுகளையும் அமைப்பின் நோக்கங்கள் செயற்பாடுகளை விபரிக்கும் நோக்கோடும் இந்த கலந்துரையாடல் ஓழுங்கு செய்யப்பட்டது.

வட மாகாணத்தில் மட்டும் 20011 மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக சமூக சேவைத்திணைக்களம் கணக்கிட்டு வெளியிட்டுள்ளது என்ற தகவலை DATA அமைப்பு பகிர்ந்ததோடு இந்த மாற்றுத்திறனாளிகள் இன்னமும் 10 வருடங்களில் எந்த நிலையில் வாழப்போகிறார்கள் என்று நாங்கள் சிந்திக்க தலைப்பட வேண்டும் எனும் வேண்டுகோளையும் விடுத்தது.

மாற்றுத்திறனாளிகளை போல் பெண் தலைமைத்துவ குடும்பங்கள், போரில் பெற்றோரை இழந்த சிறுவர்கள், போரினாள் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் ஆகியோரின் விதிகளை இன்னும் 10 வருடங்களில் அவரது வாழ்வியல் எவ்வாறு இருக்கப் போகின்றது என்றும் நாங்கள் சிந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது சிரேஸ்ட பத்திரிகையாளர்கள், சமூக சேவைத் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பாதிக்கப்பட்டோர் குறித்தான பரந்த புரிதலோடு அர்களுடைய அபிலாஷைகளையம் அவர்களிற்குறிய தேவைகளையம் பூர்த்தி செய்வதற்கு பாதிக்கப்பட்டோரோடு நாங்கள் அனைவரும் இணைந்து பயணிப்பது பற்றி ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்தனர்.