கொழும்பு துறைமுக ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும்…

regional maritime pedigree ipad 1024x400 1
regional maritime pedigree ipad 1024x400 1

கொழும்பு துறைமுகத்தின் 3 ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதம் இன்று (02) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

கொழும்பு துறைமுகத்தின் 3 ஊழியர்கள் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பழுதூக்கி மீது ஏறி நேற்று (01) உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்காமல், துறைமுக அதிகார சபையின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பது அவர்களின் அடிப்படை கோரிக்கையாகும்.

அண்மையில் சீனாவில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட 3 பளுதூக்கிகளில் ஒன்றின் மீது ஏறியே இவர்கள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர்.

கடந்த அரசாங்க காலத்தில் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 3 பளுதூக்கிகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

இந்த பழுதூக்கிகளை கிழக்கு முனையத்தில் பொருத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அதற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.