‘நந்திக்கடல் பேசுகிறது’ நூல் வெளியீடு

IMG 3912
IMG 3912

போர்க்காலத்தில் இடம்பெற்ற துயரங்களை அடிப்படையாகக்கொண்ட நந்திக்கடல் பேசுகிறது நூல் இன்று ழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.

யாழ்ப்பாணம் கலை தூது கலையகத்தில் இடம்பெற்ற நூல் வெளியீட்டில் முதல் பிரதியினை அருட்தந்தை ரவிச்சந்திரன், சூழலியலாளர் ஐங்கரநேசன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகத்துறை விரிவுரையாளர் ரகுராம் ஆகியோர் இணைந்து விடுதலைப்போரில் தளபதியாக இருந்த சோதிகாவின் தாயாரிடம் நூலினை வழங்கினார்.

குறித்த நூல் ஜெராவால் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் குறித்த நூல் பேசுகிறது.

நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக துறை விரிவுரையாளர் கலாநிதி சி. ரகுராம் முன்னாள் வடக்கு மாகாண அமைச்சரும் சூழலியலாளர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், தமிழ் சிவில் சமூகத்தின் அருட்தந்தை இ.ரவிச்சந்திரன், மகாவலி எதிர்ப்பு தமிழர் மத உரிமை பேரவையின் துணைத் தலைவர் வி.நவநீதன் மற்றும் ஆர்வலர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்