பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் பணிகள் ஆரம்பம்

ugc
ugc

கடந்த வருடத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் பணி நாளை முதல் ஆரம்பிக்கப்படுமென்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஏ.எஸ்.எம்.குணரத்ன தெரிவித்துள்ளார்.

அந்தந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் இதற்குத் தேவையான திட்டத்தைத் தயார் செய்துள்ளனர் என்று தெரிவித்த அவர் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்ட வேளையில் பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் முதல் சுற்றுத் தெரிவு பூர்த்தி செய்யப்பட்டு வெற்றிடங்களைப் பூர்த்தி செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.