எல்பிட்டிய பிரதேச சபை அங்கத்தவர்களின் பெயர் பட்டியல்

elpitiya 1
elpitiya 1

எல்பிட்டிய பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள அங்கத்தவர்களின் பெயர் பட்டியல் எதிர்வரும் புதன்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது.

25 சதவீத பெண்களின் பிரதிநிதித்துவத்துடன் தமது அங்கத்தவர்களைப் பெயரிட்டு அனுப்புமாறு காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன விதானபத்திரண அந்தந்தக் கட்சிகளுக்கு அறிவித்துள்ளார்.

நாளை பெயர்ப் பட்டியல் தமக்குக் கிடைக்கும் என மாவட்ட செயலாளர் கூறியுள்ளார்.

வர்த்தமானியின் மூலம் பெயர்ப் பட்டியல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் பிரதேச சபையின் ஆரம்பக் கூட்டம் நடைபெறும் தினம் அறிவிக்கப்படும் எனவும் அதன் பின்னரே தலைவரும் பெயரிடப்படுவார்.