பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கான நற்செய்தி

big onion
big onion

பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு வரலாற்றிலேயே ஆகக்கூடுலான விலை கிடைத்துள்ளது.

ஒரு கிலோவுக்காக 150 ரூபா ஆகக்கூடிய விலை இம்முறை உற்பத்தியாளர்களுக்குக் கிடைத்துள்ளது. இந்தியாவின் பெரிய வெங்காய ஏற்றுமதி தடைசெய்யப்பட்டமையும் இதற்குக் காரணமாகும். ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கான உற்பத்திச் செலவு 50 ரூபாவுக்கும் 52 ரூபாவுக்கும் இடைப்பட்டதாக அமைந்திருந்தது என்று மாத்தளை விவசாய பிரதிப் பணிப்பாளர் எம்.பி.கே. தொடன்வல தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, இம்முறை ஆகக்கூடிய வருமானத்தை பெரிய வெங்காய உற்பத்தியாளர்கள் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அடுத்த வருடத்தில் 1200 ஹெக்டயர் வரை பெரியவெங்காய செய்கையை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.