கொரோனா சமூக பரவலை தடுக்க அரசு நடவடிக்கை! – பவித்ரா

1585710808 pavithra 2
1585710808 pavithra 2

கொரோனா வைரஸ் சமூக பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் 339 கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்டு மக்கள் கொரோனா வைரஸ் பரவல் குறித்து வீண் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் கூறினார்.

வைரஸ் பரவலை தடுக்க அரசாங்கம் முழுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சமூகத்தில் பதிவாகிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது என்றும் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

புனர்வாழ்வு முகாம்களில் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், சமூகத்தில் வைரஸ் பரவாமல் தடுக்க அரசாங்கம் முழுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.