சர்வ மதங்களின் ஊடாக அரசியல் தலைவர்களையும் வழிநடத்த முயலவேண்டும் – யாழ்.ஆயர்!

Jsustin Gnanapragasam
Jsustin Gnanapragasam

சர்­வ ம­தங்­களின் ஊடாக மக்­களை வழி நடத்தும் அதே­வேளை அர­சியல் தலை­வர்­க­ளையும் அவ்­வ­ழியில் செய­லாற்­று­வ­தற்கு நாங்கள் முயற்­சிகள் எடுக்­க­ வேண்டும் என யாழ்.ஆயர் அருட்­க­லா­நிதி ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்­பி­ர­காசம் தெரி­வித்தார்.
திரு­கோ­ண­மலை மாவட்ட எகேட் கரித்தாஸ் நிறு­வ­னத்தின் ஏற்­பாட்டில் திரு­கோ­ண­மலை மாவட்ட சர்­வ­ ம­தத்­த­லை­வர்கள் யாழ்.ஆயரை நேற்று ஆயர் இல்­லத்தில் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டி­ய­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்,

சர்வ மதங்கள் ஊடா­கத்தான் இந்த நாட்­டிற்கு சமா­தா­னத்தைக் கொண்­டு­வ­ர ­மு­டியும். எல்லா மதங்­களும் போதிப்­பது அன்பு, சமா­தானம், இரக்கம். எல்லா மதங்­க­ளும்­ இ­தைத்தான் சொல்­கின்­றன. இதன் ஊடா­கத்தான் மக்­க­ளையும் வழி­ந­டத்­த­வேண்டும். அர­சி­யல்­வா­தி­களை நம்­பினால் நாங்கள் எத­னையும் செய்­ய ­மு­டி­யாது.

அர­சி­யல்­வா­திகள் அர­சியல் நலன்­க­ளுக்­கா­கத்தான் செயற்­ப­டு­கின்­றார்கள். இவர்­களைத் திருத்­த­ மு­டி­யாது. எங்­களால் மக்கள் மத்­தியில் அன்பு, இரக்கம் போன்­ற­வற்றை செய்­ய ­மு­டியும். மதங்­களில் சில அடிப்­படை வாதிகள் இருக்­கி­றார்கள். ஏப்ரல் மாதம் இடம்­பெற்ற சம்ப­வமும் இதுதான். இந்த அடிப்­ப­டை­வாதம் எல்லா மதங்­க­ளுக்­குள்ளும் இருக்­கின்­றது. நாங்கள் விழிப்­பாக இருக்­க­ வேண்டும்.

இந்த அடிப்­ப­டை­வா­தத்தை தூண்டி பகையை வளர்ப்­ப­தற்கு வேறு சிலர் பின்­ன­ணியில் இருக்­கின்­றார்கள். இதற்­காக நாங்கள் சென்று ஒரு சமு­தா­யத்தை பகைக்க முடி­யாது. நாங்கள் கார­ணத்தை அறிந்து செயற்­ப­ட­வேண்டும். சர்­வ­ ம­தத்­தினர் ஒன்­றி­ணைந்­துள்­ளது போல் மக்­க­ளையும் ஒன்­றி­ணைத்து இந்த நாட்டைக் காப்­பாற்­ற ­வேண்டும். நான், எனது, எமது மதம் என்ற போக்கு இன்­று ­கா­ணப்­ப­டு­கின்­றது. இதில் மாற்றமடை­ய ­வேண்டும். ஆசைகள் இருப்­பதால் தான் இத்­த­கைய பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­கின்­றன.

கத்­தோ­லிக்க சமயம் அய­ல­வனை நேசி என்று கூறு­கின்­றது. அதற்­காக கத்­தோ­லிக்­கரை நேசி என்று கூற­வில்லை. அனை­வ­ரை­யுமே நேசி என்றே கூறு­கின்­றது. இவ்­வாறே அனைத்து மதங்­களும் போதிக்­கின்­றன. சர்­வ­மதக் குழு­வினர் எவ்­வாறு மக்கள் மத்­தியில் சென்று செயற்­ப­டு­கின்­றார்­களோ அவ்­வாறே அர­சி­யல்­வா­தி­க­ளும் மக்­கள்­மத்­தியில் சென்று செயற்­ப­ட­ வேண்டும். தொடர்ந்தும் மக்கள் மத்­தியில் செயற் ­ப­ட ­வேண்டும் மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­த­வேண்டும் என்றார்.

இந்தச் சந்­திப்பில் திரு­கோ­ண­மலை மாவட்ட எகேட் கரித்தாஸ் நிறுவனத்தின் இயக்குநர் அருட்பணி டன்ஸ்ரன், பௌத்த தேரர் சீனாய பேமரத்ன மற்றும் இந்துக் குருக்கள், முஸ்லிம் மத குருமார்கள், யாழ்ப்பாணம் கியூடெக் கரித்தாஸ் நிறுவனத்தின் செயற்பாட்டர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.