தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேட்பாளர்களுக்கான கோரிக்கை

625.500.560.350.160.300.053.800.900.160.90 2 7
625.500.560.350.160.300.053.800.900.160.90 2 7

மத ஸ்தலங்களில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களிடமும் கோரியுள்ளது.

எதிர்வரும் பொது தேர்தலுக்காக குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, ஹம்பாந்தோட்டை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இவ்வாறு மத ஸ்தலங்களை பயன்படுத்தி பிரசார நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

1981 ஆம் ஆண்டு முதலாம் இலக்க நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 79 சரத்தின் கீழ் மத ஸ்தலங்களில் இடம்பெறும் பிரசார நடவடிக்கை அல்லது மதம் சார்பான கூட்டங்களில் கட்சி, சுயேட்சை குழுக்கள் அல்லது வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அல்லது பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்து வெளியிடுவது குற்றமாகும் எனவே இவ்வாறான நடவடிக்கைகளை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து தேரர்கள் மற்றும் மத குருமார்களிடமும் கோரியுள்ளது.