தமிழரின் இருப்பை அதிகரிக்கும் சந்தர்ப்பமே கொரோனா காலம்- கருணா

Karuna 3
Karuna 3

தற்போதுள்ள கொரோனா காலத்தை தமிழர்களின் இருப்பை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ளுமாறு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு, கொரோனா அனர்த்த நிலைமையைப் பயன்படுத்தி முஸ்லிம்களை விட அதிகளவான பிள்ளைகளை தமிழர்கள் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பெரிய நீலாவணை பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், அம்பாறை மாவட்டத்தில் நான் போட்டியிடுவதற்கு பிரதான காரணம் காணி ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துவதற்கும் இருப்பை பாதுகாப்பதற்கும் ஆகும். அடுத்ததாக அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதாகும்.

இதேவேளை, எமது இனத்தைப் பாதுகாக்க சகலரும் முயற்சிக்க வேண்டும். எதிர்காலத்தில் எமது சந்ததிகளை நாம் பாதுகாக்க கொரோனா அனர்த் நிலைமையைப் பயன்படுத்தி அதிகளவான பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

சிங்களவர்கள், தமிழர்கள் தலா இரு பிள்ளைகளைப் பெற்று நின்று விடுவார்கள். ஆனால் முஸ்லிம்கள் ஜப்பான் குஞ்சு மாதிரி பிள்ளைகளைப் பெற்றுவருகின்றார்கள்.

எனவே, இனியாவது தமிழர்களில் ஒருவர் 4 குழந்தைகளாவது பெறுங்கள்! தற்போது கொரோனா அனர்த்தத்தினால் தனிமைப்படுத்தல் சந்தரப்பம் கிடைத்துள்ளது. அதனைப் பயன்படுத்துங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.