கற்பிட்டி கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 1156 கிலோ கிராம் பீடி இலைகளுடன், 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து இந்த பீடி இலைகள் தவிர இரண்டு மீன்பிடி படகுகளும், ஒரு பாரவூர்தியும் மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் கடற்படை வாயிலாக இந்த பீடி இலைகளை கொண்டு வருவதற்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.