தேர்தலில் முஸ்லிம் மக்கள் சரியான முடிவை எடுத்து மொட்டுடன் ஒன்றுபடுவார்கள்!

112573374 mahindathondaman 4 9
112573374 mahindathondaman 4 9

நாட்டில் பொதுத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் சரியான முடிவை எடுத்து மொட்டுடன் ஒன்றுபடுவார்கள் என்று தான் நம்புவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டி – தவுலகல பகுதியில் இன்று (30) காலை நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர்,

கடந்த காலங்களில் முஸ்லிம்களிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் இந்த தேர்தலில் சரியான முடிவுக்கு வருவார்கள் என்று கூறியுள்ளார்.

முஸ்லிம் மக்களுக்கு மிகச் சிறந்த சேவையை செய்த அரசாங்கமே தனது அரசாங்கம் என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், ஒரு காலத்தில் தனது அரசாங்கத்தில் 28 முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியில் இருந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நேரத்தில் விடுதலைப் புலிகளால் காத்தான்குடியில் நூற்றுக்கணக்கான பேர் கொல்லப்பட்ட போது முஸ்லிம்கள் வயல்களிலும் மசூதிகளிலும் பாதுகாப்பாக இருக்க பாதுகாப்புப் படை இராணுவத்தினரை நிறுத்தியுள்ளது.

பின்னர் அவர்களை சேருவிலவில் குடியமர்த்த நடவடிக்கை எடுத்ததையும் பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் எம். தி. எம். சாஃபி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து ஸ்ரீலங்கா பொஜன பெரமுனவுடன் இணைந்துள்ளார்.