இலங்கை தேயிலையின் விலையில் சர்வதேச சந்தையில் அதிகரிப்பு!

hghgjhgj
hghgjhgj

சர்வதேச சந்தையில் இலங்கையின் தேயிலைக்கான விலை கடந்த ஆண்டு ஜுன் மாதத்தைக் காட்டிலும் இந்த ஆண்டு ஜுன் மாதத்தில் கிலோவுக்கு 73 ரூபாய் அளவில் அதிகரித்துள்ளது.

அதன்படி 2020ம் ஆண்டு ஜுன் மாதம் இலங்கையின் தேயிலை கிலோ ஒன்று 902 ரூபாய் 29 சதமாக நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் ஜுன் மாதம் வரையான அரையாண்டுக் காலப்பகுதியில் இலங்கையில் இருந்து மொத்தமாக 23.69 மில்லியன் கிலோ கிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் ஏற்றுமதி செய்யப்பட்டத் தொகையை விட 1.73 சதவீதம் குறைவாகும்.

எவ்வாறாயினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் தேயிலை ஏற்றுமதி ஊடாக 6.94 சதவீதம் அதிகரித்து 1.39 பில்லியன் ரூபாய்கள் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.