சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விசேட வழிப்புணர்வு செயற்திட்டம்

News 01 6

தேசத்தின் நம்பிக்கை சிறுவர் கழகம் மற்றும் கிளிநொச்சி பொலிசார் இணைந்து  சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விசேட வழிப்புணர்வு செயற்திட்டம் ஒன்றை இன்று(01) முன்னெடுத்திருந்தனர்.

கிளிநொச்சி பொன்நகரில் அமைந்துள்ள திருச்சபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சிறுவர் நிகழ்ச்சித்திட்டமான தேசத்தின் நம்பிக்கை சிறுவர் கழகத்துடன் கிளிநொச்சி பொலிசாரும் இணைந்து குறித்த விழிப்புணர்வு செயற்திட்டத்தினை இன்று முன்னெடுத்திருந்தனர். குறித்த நிகழ்வு இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது.

இதன்போது சிறுவர் பாதுகாப்பு தொடர்பான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், விழிப்புணர்வூட்டும் வகையிலான கருத்துக்களும் இடம்பெற்றது.

நாட்டில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் குறித்த செயற்திட்டமானது மாவட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுவர் துஸ்பிரயோகத்தை முழுமையாக இல்லாதொழிப்போம் எனும் கருப்பொருளில் குறித்த விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கொரோனா அச்சுறுத்தல் நிறைந்த காலப்பகுதியில் பாடசாலைகளிற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் உலக நாடுகளில் குறிப்பாக கிழக்காபிரிக்க நாடுகளில் ஒன்றான மாலாவியில் 7000 பாடசாலை மாணவிகள் கர்ப்பம் தரித்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ள நிலையில், எமது நாட்டில் இவ்வாறான துஸ்பிரயோகங்கள் இடம்பெறாதிருக்க இவ்வாறான வழிப்புணர்வு செயற்திட்டங்கள் மக்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் இன்றியமையாத ஒன்றாகியுள்ளது.