கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி!

unnamed file
unnamed file

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி அனுருத்த சம்பாயோ சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் குருநாகல் பகுதியில் வைத்து காவல்துரையினரால் கைது செய்யப்பட்டள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிறைச்சாலை கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்கிய குற்றச்சாட்டில் அனுருத்த சம்பாயோ பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இன்று இவர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.