கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

02

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,823ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து இதுவரையில் 2 ஆயிரத்து 514 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள அதேநேரம், இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளான 298 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டள்ளனர். என்பதுடன், இந்த வைரஸ் காரணமாக இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கொரோனா அச்சுறுத்தல் காலப்பகுதியில் சேவையாற்றிய சுகாதார சேவை பணிப்பாளர்களுக்கு உந்துருளிகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.