சிறைச்சாலைகளின் பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸ் விஷேட அதிரடிப்படை

GettyImages 104564127
GettyImages 104564127

கொழும்பு சிறைச்சாலைகளின் பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த உத்தியோகபூர்வ வேண்டுகோளை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய பாதுகாப்பு அமைச்சிடம் முன் வைத்துள்ளார்.

வெலிக்கடை , மெகசின் , கொழும்பு மற்றும் ரிமான்ட் சிறைச்சாலைகளுக்கும் பெண்கள் சிறைப் பிரிவுகளிலும் இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் புஸ்ஸ மற்றும் அகுனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.