திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் அரசாங்க அதிபர்

Trinco

திருகோணமலை மாவட்டத்தின் முதலாவது தேர்தல் முடிவினை இன்று நண்பகல் அளவில் வெளியிட உத்தேசித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம் அசங்க அபேவர்தன தெரிவித்தார்.

திருகோணமலை மத்திய வாக்கெடுப்பு நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மத்திய வாக்கெண்ணும் நிலையத்தல் அமைக்கப் பட்டிருக்கின்ற 44 வாக்கு எண்ணும் நிலையங்களில் 35 நிலையங்களில் சாதாரண வாக்குகள் எண்ணும் பணிகளும் 9 நிலையங்களில் தபால் மூலமான வாக்குகளை எண்ணும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் மாவட்டத்தின் முதலாவது பெறு பேற்றினை இன்று நண்பகல் அளவிலும், அதேபோல சகல முடிவுகளையும் இன்று மாலைக்குக்குள் வழங்குவதற்கு தீர்மானித்திருக்கின்றோம். அந்த அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் குறிப்பாக 73.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

வாக்குகள் என்னும் பணிகள் அனைத்தும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைவாகவே நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் சுகாதார திணைக்களத்தின் ஊழியர்கள் அனைவரும் இது சம்பந்தமான தங்களுடைய கடமைகளை வாக்கு என்னும் நிலையத்தில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.