ரணிலின் சாதனையை முறியடித்தார் மஹிந்த

unnamed 6 1

குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ விருப்பு வாக்குகளில் முன்னிலையில் உள்ளார்.

இவர்  5,27,364 அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அதாவது கடந்த 2015 தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5,00,566 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

அந்த சாதனையை  தற்போது பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ முறியடித்துள்ளார்.

நடைபெற்று முடிந்துள்ள பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

அக்கட்சி, 68 இலட்சத்து, 53ஆயிரத்து 693 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் செல்லுபடியான மொத்த வாக்குகளில் 59.09 வீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

அதாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு இன்னும் 5ஆசனங்களே குறித்த கட்சிக்கு தேவைப்படுகின்றது. எனவே அதனை தனக்கு ஆதரவான கட்சிகளுடன் இணைந்து 3/2பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.