குறுகிய காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பாரிய சாதனை- ரஞ்சித்

mathuma bandara

குறுகிய காலத்தில் நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியாக மாற முடிந்துள்ளமை சாதனையென ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

நிறைவடைந்துள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ரஞ்சித் மத்தும பண்டார மேலும் கூறியுள்ளதாவது, “நாங்கள் ஐந்து மாதங்களுக்கு முன்பே கட்சியொன்றை பதிவு செய்து, தேர்தல் ஒன்றுக்கு முகம்கொடுத்தோம்.

அதாவது பழைய மற்றும் பாரம்பரிய அரசியல் கட்சிகளை பின்தள்ளி பெரும்பான்மையை நிலைநாட்ட எங்களால் முடிந்ததுள்ளது.

எனவே எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு பலமான எதிர்க்கட்சியாக செயற்பட்டு, சிறந்த முறையில் எங்களது கடமையை  செய்வோம்.

மேலும் ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்த தூய்மையான அரசியல்வாதிகள் மாத்திரமே எமது கட்சியில் தற்போது இருக்கின்றனர்.

அதேபோன்று மக்களுக்கு உண்மையாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றக்கூடிய அரசியல்வாதிகளுடன் மாத்திரமே இணைந்து பயணிப்போம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.