ஹம்பாந்தோட்டையில் ‘CHINA’ (சீனா) பெயரைக் காட்டும் கட்டடம்

unnamed 3 1 425x450 1

‘CHINA’ (சீனா) என்ற வார்த்தையின் வடிவத்தில் ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள ஒரு கட்டடத்தைக் காட்டும் செயற்கைக்கோள் படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இக்கட்டிடம் ஆனது ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவல – சூரியவெவ வீதியில் அமைந்துள்ள சீனாவின் இலங்கை துறைமுக சேவையால் நிர்வகிக்கப்படும் கட்டடமொன்றே இவ்வாறு ‘CHINA’ (சீனா) என்ற வார்த்தையின் வடிவத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த வரைபடங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே இலங்கையில் பல இடங்களில் உள்ள வீதியைக் குறிக்கும் பெயர்ப்பலகையில்  சீனா மொழியில் எழுதப்பட்டமை குறித்து சர்ச்சைகள் எழுந்திருந்த நிலையில், தற்போது இந்த விடயம் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.