எவரும் 19 ஆம் திருத்தத்தை நீக்குவதற்கு ஆதரவு வழங்ககூடாது: சுமந்திரன்!

MP MA Sumanthiran 850x460 acf cropped 710056
MP MA Sumanthiran 850x460 acf cropped 710056

அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தத்தை நீக்குவதற்கு எவரும் ஆதரவு வழங்ககூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், தெரிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தம் இன்னும் பூரணப்படுத்தப்படவில்லை எனவும், அதில் நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயங்களை மாத்திரமே நீக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தத்தை மாற்றியமைக்க அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக எம்.ஏ சுமந்திரன் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.