மாவை சேனாதிராசா -சுமந்திரன் இரகசிய சந்திப்பு!

936a17e0 47e0 4070 a96e 738fe98add06
936a17e0 47e0 4070 a96e 738fe98add06

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கும் அக்கட்சியின் சார்பில் பாரளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் நகரில் உள்ள மருத்துவர் ஒருவரின் இல்லத்திலேயே நேற்றிரவு இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சுமார் 3 மணிநேரத்துக்கும் மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றதாக அறியமுடிகின்றது. இதில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து தெரிய வரவில்லை.

எனினும் தேசிய பட்டியல் எம்.பி. குறித்தும் இலங்கை தமிழரசுக் கடசியின் தலைவர் பதவி குறித்தும் அதிகம் பேசப்பட்டதாக நம்பகமான வட்டாரங்கள் எமக்குத் தெரிவித்தன.